திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத...
Rishabh Pant : `டெல்லி அணியிலிருந்து வெளியேறியது இதற்காக அல்ல..!' - கவாஸ்கருக்கு ரிஷப் பண்ட் பதில்
அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கிறது. ஐ.பி.எல் அணிகள் இதனை முன்னிட்டு கடந்த மாத இறுதியில், தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ ஆகிய அணிகள் தங்களின் கேப்டன்களையே தக்கவைக்காமல் விடுவித்தது. அதில், மிக முக்கியமாகப் பார்க்கப்படுவர் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட்.
இந்த ஏலத்தில் இவரே அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று இர்பான் பதான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இவ்வாறிருக்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ``டெல்லி அணி நிச்சயம் ரிஷப் பண்ட்டை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வீரர்களைத் தக்கவைக்கும்போது, அந்தந்த வீரருக்கும் அணியின் உரிமையாளருக்கும் இடையே தக்கவைப்புத் தொகை பற்றி விவாதிக்கப்படும்.
சில வீரர்கள் தங்களது அணியின் உரிமையாளரால் நம்பர் ஒன் தக்கவைப்புத் தொகையை விட அதிக தொகைக்கு தக்கவைப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிஷப் பண்ட் விஷயத்தில் ஒருவேளை இங்கு கருத்துவேறுபாடு இருந்திருக்கலாம். எனவே, டெல்லி அணி ரிஷப் பண்ட்டை மீண்டும் சேர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு கேப்டனும் தேவை." என்று தெரிவித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் பேசும் இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பக்கத்திலும் பகிரப்பட்டது. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவுக்கு ரிஷப் பண்ட், ``என்னுடைய தக்கவைப்பு என்பது நிச்சயம் பணத்தைப் பற்றியது அல்ல என்று என்னால் கூற முடியும்" என ரிப்ளை செய்திருக்கிறார்.
டெல்லி அணியிலிருந்து ஏன் விடுவிக்கப்பட்டார் என்ற விவகாரத்தில், பணம் காரணமில்லை என ரிஷப் பண்ட் கூறிவிட்ட நிலையில், வேறு என்ன காரணமாக இருக்கும் என கேள்விகள் கிளம்பியிருக்கிறது.
ஐ.பி.எல் ஏலத்தில் எந்த வீரர் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்பது குறித்த உங்களின் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...