யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
Shivam Dube: `கஷ்டப்படுற காலத்துல ஒவ்வொரு பைசாவும் ரொம்ப முக்கியம்'- இளம் வீரர்களுக்கு துபே அறிவுரை!
'உதவித்தொகை வழஙகும் நிகழ்வு!"
'கஷ்டப்படுற காலத்துல நமக்கு கிடைக்குற ஒவ்வொரு பைசாவும் மதிப்புமிக்கது.' என தனது சிறுவயதை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் சென்னை அணியின் வீரர் சிவம் துபே.
'நிகழ்வின் பின்னணி!'
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கத் தொடங்கியிருக்கும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த இளம் திறமையாளர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 30,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சென்னை அணியின் வீரர் சிவம் துபே, சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
'சிவம் துபே அறிவுரை!'
இதில் பேசிய சென்னை அணியின் வீரர் சிவம் துபே, 'வேறு மாநிலங்களில் இந்த மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்கிறார்களா என தெரியவில்லை. நான் மும்பைக்கு சென்று இதைப் பற்றி சொல்லி அங்கிருப்பவர்களையும் இதைப் போன்று செய்ய சொல்வேன்.
ஒரு வீரருக்கு 30,000 ரூபாயை உதவித்தொகையாக கொடுக்கிறார்கள். இது சிறிய தொகையாக தெரியலாம். ஆனால், நாம் கஷ்டப்படுகிற காலத்தில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் மதிப்புமிக்கதுதான். ஒரு காலத்தில் 30,000 ரூபாய் எனக்குமே பெரிய தொகையாக இருந்திருக்கிறது.
நானும் ஆசியப்போட்டியில் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுவது கொஞ்சம் வித்தியாசமான பெருமைமிக்க உணர்வாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் சர்வதேச தொடர்களில் தங்கங்களை வென்று வர வேண்டும்.' என பேசியிருந்தார்.
மேலும், ஒவ்வொரு வீரர் வீராங்கனைக்கும் தலா 70,000 ரூபாயை தாம் ஊக்கத்தொகையாக வழங்குவதாக நிகழ்விலேயே அறிவிக்கவும் செய்தார்.
சென்னை அணியின் சிஇஓ காசி பேசுகையில், 'சென்னையின் செயல்பாடு உங்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். வரும் நாட்களில் எங்கள் அணி சிறப்பாக ஆடும். 2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால், கடைசியில் எல்லா போட்டிகளையும் வென்று சாம்பியனானோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாக ஆட கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.' என்றார்.