செய்திகள் :

Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?

post image

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.

இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் மீதான தங்களின் அன்பையும், அக்கறையையும் இந்தக் கிராம மக்கள் வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கிறார்கள் இவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு வருகின்றன.

பறவைகள்
பறவைகள்

தீபாவளி பண்டிகை பொதுவாக இதே காலகட்டத்தில் வருவதால் பட்டாசு சத்தம் பறவைகளைப் பயமுறுத்தி, அவற்றின் இனப்பெருக்கச் சூழலைப் பாதிக்கக்கூடும். இதனைக் கருத்தில் கொண்டு, பல கிராமங்கள் பட்டாசு வெடிப்பதைத் தாங்களாகவே முன்வந்து நிறுத்தியுள்ளன.​ அந்தக் கிராமங்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளலாம்

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்கள், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றன.

செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன்காட்டு வலசு, பூங்கம்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனைப் பின்பற்றி வருகின்றன. பட்டாசுகளுக்குப் பதிலாக, தீபங்கள் மற்றும் மின்விளக்குகளால் தங்கள் இல்லங்களை அலங்கரித்தும், மத்தாப்புகளை மட்டும் கொளுத்தி இவர்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இதுபோன்று பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

சிவகங்கை

கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்கள், வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளைப் பாதுகாக்க, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டாசுகளைத் தவிர்த்து வருகின்றனர்.​

திருச்சி

தோப்புப்பட்டி மற்றும் சாம்பட்டி கிராமங்களில், பழமையான ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்களைப் பாதுகாக்க மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த வழக்கம் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.​

திருநெல்வேலி

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்கள், இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்காக அமைதியான தீபாவளியைக் கடைப்பிடிக்கின்றன.

இந்தக் கிராமங்களின் செயல்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான உறவிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் - முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கர... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: தேனியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; முல்லைப்பெரியாறு அணையில் உபரி நீர் திறப்பு!

கேரளா மாநிலம் இடுக்கி மற்றும் வருசநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள மூலவைகையாறு மற்றும் முல்லை பெரியாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபாளையம் ... மேலும் பார்க்க

கோவை: மயக்க ஊசி கும்கிகள் - போராடி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை!

ரோலக்ஸ் யானைகும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கபில் தேவ் கும்கி யானை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கும்கி யா... மேலும் பார்க்க

நண்டு தெரியும்; தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு?

தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு? இந்த நண்டுகள் எங்கு வசிக்கும்? இவற்றுக்கு ஏன் தில்லை நண்டுகள் என்று பெயர் வந்தது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பொதுவாக ’பத்துக்கால... மேலும் பார்க்க