செய்திகள் :

South Korea: கட்டாய ராணுவ பணியைத் தவிர்க்கத் திட்டம் போட்ட இளைஞர்; நண்பரோடு சிறையிலடைத்த அரசு!

post image

தென் கொரியாவில், கட்டாய ராணுவ பணியிலிருந்து தப்பிக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கிய இளைஞரைப் பிடித்து அரசு சிறையிலடைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தென் கொரியாவைப் பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

தென் கொரியா

பிரபல தென் கொரிய BTS குழு உறுப்பினர் ஜே ஜோக் கடந்த அக்டோபரில் கட்டாய ராணுவப் பணியை நிறைவுசெய்திருந்தார். இவ்வாறிருக்க, இந்த கட்டாய ராணுவ பணியில் நாட்டமில்லாத 26 வயது தென் கொரிய இளைஞர், இதிலிருந்து தப்பிக்கத் தனது நண்பரிடம் ஒரு யோசனையைக் கேட்டிருக்கிறார். அவரோ, உட்கொள்ளும் தண்ணீர் மற்றும் உணவின் அளவை இரட்டிப்பாக்கி உடல் எடையைக் கூட்டுமாறு கூறியிருக்கிறார்.

அதன்படி, ராணுவ உடற்தகுதித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக தனது உணவை இருமடங்காகப் பெருக்கி தனது உடல் எடையை 120 கிலோவாக அதிகமாக்கினார். இது, ராணுவ உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமலிருப்பதற்கான எடையாகவும் அமைந்தது. பின்னர், இந்த விவரம் தெரியவந்து சியால் நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், அவரின் நண்பர் தான் இத்தகைய யோசனையைப் பரிந்துரைத்தார் என்று தெரியவர, அவரோ தான் இதை விளையாட்டாகச் சொன்னதாக விளக்கினார்.

சிறை

இருந்தாலும், அவரின் நண்பருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இந்த செயலில் ஈடுபட்ட இளைஞருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தென் கொரியா-வில் இதுபோன்ற விஷயம் நடப்பது இதுவொன்றும் முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2018-ல் கல்லூரி மாணவர்கள் சிலர் இந்த கட்டாய ராணுவப் பணியைத் தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையைக் கூட்டிய சம்பவங்கள் நடந்திருக்கிறது.

பொள்ளாச்சி: வைரலான தேங்காய் வடிவ இருக்கை; தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமணமா? பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி 'தென்னை நகரம்' என்றழைக்கப்படுகிறது. தேங்காய் சாகுபடியில் இந்தியளவில் பொள்ளாச்சிதான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தென்னை மரங்களில் 3.5 கோடிக்கும் மேற... மேலும் பார்க்க

UP: பண மாலையைப் பறித்துச் சென்ற டெம்போ டிரைவர்... சேஸ் செய்து மீட்ட மணமகன்! | Viral Video

உத்தரப்பிரதேசத்தில் மணக் கோலத்தில் ஒருவர் பைபாஸில் பைக்கிலிருந்து, ஓடும் மினி டெம்போவுக்குத் தாவி சேஸிங்கில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து வெளியான தகவலின்படி மீரட்டில... மேலும் பார்க்க

China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்!

சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வி பாடங்களில் கலந்து கொள்வதற்காகவும், காதலியைச் சந்திப்பதற்காகவும், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மூன்று மாத காலங்களாக வாரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

'கமிட் ஆனால் காசு!' - காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!

சிங்கிளாக இருப்பவர்கள் கமிட்டானால் 66 யுவான் (நம்மூர் காசுக்கு ரூ.750) ரொக்க பரிசாக வழங்குகிறதாம் சீன நிறுவனம் ஒன்று. சீனாவை சேர்ந்தது இன்ஸ்டா 360 என்னும் கேமரா கம்பெனி. இவர்கள் கம்பெனிக்கென்று ஒரு டே... மேலும் பார்க்க

குடிபோதையில் பள்ளியில் ஆசிரியர்கள் தகராறு; கைது செய்ய போதையில் வந்த கான்ஸ்டபிள்... பீகாரில் கொடுமை!

பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனையாகிறது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் இரண்டு பேர் குடிபோதையில் வந்து மாணவர்களுக்... மேலும் பார்க்க

Marriage: ``ரயில்வே ஸ்டேஷன் முதல் ரோலர் கோஸ்ட் வரை'' - உலகை வியக்க வைத்த ஆச்சர்யத் திருமணங்கள்!

தனி மனித ஒழுக்கத்தை முன்னிறுத்தி மதங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது திருமணம். அதனால்தான் திருமணம் என்ற ஒரு கட்டமைப்பை 'திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்று புனிதப்படுத்தப்படுகிறது. ஆனால், த... மேலும் பார்க்க