செய்திகள் :

Stalin: "சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்..." - முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

post image
கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், "முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். 'நான் சென்னை வருகிறேன்' என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.

கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, என் மனம் உடைந்து சுக்கு நூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப் பணிகளைக் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம். மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என எனக்கு நிறைய பயிற்சி கொடுத்திருக்கிறார்.

இன்று அவர் இல்லை என நினைக்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க., முப்பெரும் விழாவின்போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

ஸ்டாலின், முரசொலி செல்வம்

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாகக் கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் 'திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு' ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்." என்று மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay: TVK மாநாட்டில் ஜார்ஜ் கோட்டை தீம்; ஏற்பாடுகள் என்னென்ன? | Spot Visit

தமிழக அரசியலில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிற விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதிக்குச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக 156, சிவசேனா 78, அஜித்பவாருக்கு 54 - கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு அப்டேட்

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியும் தொகுதிப் பங்கீடு குறித்து பே... மேலும் பார்க்க

TVK: தவெக நிர்வாகி மறைவு: "ஏன்டா இப்படிப் பண்ண.." - கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய்

அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.அந்த வ... மேலும் பார்க்க

`ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ - அறப்போர் இயக்கம்

'அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலம் கிட்டதட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக' அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க

Elon Musk: "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்.." - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த... மேலும் பார்க்க