செய்திகள் :

Suriya: ``20 வருடங்களுக்கு முன்னால் ரஜினி சார் சொன்ன அந்த விஷயம்!'' - சூர்யா பேட்டி!

post image
அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வருகிறது கங்குவா.

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே படக்குழு தொடங்கிவிட்டது. அதற்காக பல மாநிலங்களுக்கும் பம்பரமாய் சுற்றி திரிகிறார் சூர்யா. தனியார் ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் சூர்யா.

அவர், "பல நடிகர்களும் தங்களுடைய திரைப்படத்தை பார்க்கவே கூச்சப்படுவார்கள். நானும் அப்படிதான். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்பட பல இயக்குநர்கள் நான் முதல் நாள் முதல் காட்சியில் பங்குபெறாததை எண்ணி வருத்தமடைந்திருக்கிறார்கள். நமக்கு எப்போதும் அந்த திருப்தி என்பது ஏற்படாது. நான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது `இதை இன்னும் இப்படி செய்திருக்கலாம்' என்ற எண்ணமே தோன்றும். கடந்த வாரம் நடித்த காட்சிகள் பற்றி இந்த வாரம் இயக்குநர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பேன். `அந்த காட்சி சரியாக இருந்ததா? மீண்டும் டேக் எடுப்போமா' என்று பேசிக் கொண்டே இருப்பேன்.

Suriya

இருபது வருடங்களுக்கு முன்பு நான் ரஜினி சாரை விமானத்தில் சந்தித்தேன். அப்போது அவர் `நீங்கள் ஹீரோ மட்டுமல்ல. நல்ல நடிகரும்கூட. அதனால் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்காதீர்கள்' எனக் கூறினார். அந்த விஷயம் என்னில் பதிந்துவிட்டது. அதனால்தான் `சிங்கம்' போன்ற கமர்சியல் திரைப்படத்திலும் நடிக்கிறேன். அதே சமயம் `7-ம் அறிவு, ஜெய் பீம்' மாதிரியான கன்டன்ட் திரைப்படங்களிலும் நான் நடிக்கிறேன். ரசிகர்களும் அதைதான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய மகளும் என்னிடம் ` எப்படி அப்பா, சிங்கம் மாதிரியான படத்தில் நடித்துவிட்டு ஜெய் பீம் மாதிரியான படங்களிலும் நடிக்கிறீர்கள் ' எனக் கேட்டார். " என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kanguva Vs Francis : ரெண்டு பேருக்கும் இருக்கிற வித்தியாசம் இது தான்! -Director Siva | Suriya | DSP

விகடன் குழுவினருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கங்குவா பற்றிய விவரங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சிவா. அவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது, தயாரிப்புக்கு முந்தைய பணிகள் மற்றும் ப... மேலும் பார்க்க

Suriya: `சில்லுனு ஒரு காதல்' ; சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் திரையில்? - சூர்யாவின் பதில்!

பிரமாண்டமான முறையில் வெளியாகிறது `கங்குவா'.சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படும் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் பாபி தியோலும் திஷா பதானியும் அறிமுகமாகிறார்கள். கங்குவா திரைப்படத்... மேலும் பார்க்க

Amaran: "அந்த தருணத்துல சிவகார்த்திகேயனா பாக்கல; முகுந்த் வரதராஜனா பாத்தோம்.." - நடிகர் ஶ்ரீ குமார்

தீபாவளி வெளியீடாக `அமரன்' திரைக்கு வருகிறது.இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அதாவது முகுந்த் வரதராஜனின் `கேட்' குழுவில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். தமிழிலிருந்து நமக்கு மி... மேலும் பார்க்க

Ajith: ``இப்ப புரியுதா நான் ஏன் சிவாவ விடலைன்னு'' - சூர்யாவிடம் அஜித் சொன்ன விஷயம்!

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது கங்குவா திரைப்படம். இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்பட முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றுக் கூறியிருக்கிறார்.சிறுத... மேலும் பார்க்க

கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டப்போ எனக்கு நம்பிக்கையே வரல! - Redin & Sangeetha | Thala Diwali

விகடனின் இந்த பிரத்யேகமான நேர்காணலில் நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் அவரது மனைவி சங்கீதாவும் நம்மிடையே பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வேடிக்கையான மற்றும் நேர்மையான உரையாடலில், அவர்கள் தங்கள் திருமணம்,... மேலும் பார்க்க

10 Years Of Kaththi : `செல்ஃபி புள்ள பாடல் உருவானது இப்படிதான்!' - அனிருத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

`கத்தி' திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.ஏ. ஆர். முருகதாஸுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்த திரைப்படம் `கத்தி'. அப்போது வரை வெறும் 5 படங்கள் மட்டும் இசையமைத்திருந்த 24 வயது... மேலும் பார்க்க