செய்திகள் :

TVK : 'வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியே தாமதம்; சிபிஐ இன்னும் தாமதம் ஆகும்' - விஜய் சொல்வதென்ன?

post image

வேங்கை வயலில் நடந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதுக்குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"வேங்கை வயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்! ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' - CPM Kavi varman

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ... மேலும் பார்க்க

2026 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்? | எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில்,* குடியரசு தினம்: கொடியேற்றிய ஆளுநர்.* கேரளா: ஆளுநர் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் மயங்கிய காவல் ஆணையர்.* ஆளுநர் மாளிகையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த ஜெயக்குமார், H.ர... மேலும் பார்க்க

தூது போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்... மேலும் பார்க்க

``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" - அமித் ஷாவை சாடிய கார்கே; பாஜக-வின் ரியாக்சன் என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடியதைத் தொடர்த்து, ``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விம... மேலும் பார்க்க

Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர

முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர், 'விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' என்றும் பேசியிருக்கிறார்.Minister Jayakumar திமுகவை விமர்சித்துப் பேசிய ஜெயக்குமா... மேலும் பார்க்க

`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமுக ராஜீவ் காந்தி

`சீமான் கூறிய பொய்களை நம்பி...'திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழீழம் குறித்து சீமான் பேசும் அனைத்தும் பொய் என்று அம்பலமாகிவிட்டது... மேலும் பார்க்க