செய்திகள் :

Ukraine: உக்ரைனில் நீல நிறத்தில் மாறிய நாய்கள்; அதிர்ச்சியில் மக்கள்; காரணம் என்ன?

post image

உக்ரைனின் செர்னோபில் நாய்கள் நீல நிறமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

உக்ரைனின் செர்னோபில் என்ற பகுதியில் அணு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. 1986ம் ஆண்டு அங்கு மிக மோசமான ஒரு அணு கசிவு விபத்து ஏற்பட்டது.

அந்த சமயத்தில் பலர் உயிரிழந்திருந்தனர். அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.   

செர்னோபில் அணு கசிவு விபத்து
செர்னோபில் அணு கசிவு விபத்து

தங்கள் உடைமைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர். குறிப்பாக மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை அப்பகுதியில் அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர்.

தடைசெய்யப்பட்டிருக்கும் அந்தப் பகுதியில் மட்டும் தற்போது சுமார் 700 நாய்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்த நாய்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘டாக்ஸ் ஆப் செர்னோபில்’ எனும் அமைப்பின் துணை நிறுவனமான ‘கிளீன் பியூச்சர்ஸ் பண்டு’, நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள நாய்களுக்கு உணவு வைப்பதற்காக அந்த நிறுவனத்தினர் அங்கு  சென்றிருக்கின்றனர்.

அப்போது  அங்குள்ள நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

நீல நிறத்தில் மாறிய நாய்கள்
நீல நிறத்தில் மாறிய நாய்கள்

இப்படி ஒரு சம்பவம் நடப்பது  இதுவே முதல்முறை என்று  கூறப்படுகிறது. நிறம் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

கதிர்வீச்சால் ஏற்பட்ட மரபணு பிறழ்வால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்குமோ? என்று மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

நீல நிறத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதே தற்போதுள்ள முதன்மையான நோக்கம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கல... மேலும் பார்க்க

மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன?

மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் 580 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மாநகராட்சிக்கு சொந்தமான சதாப்தி மருத்துவமனை நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.500 கோடி செலவிட... மேலும் பார்க்க

`இலையை வைத்து இசை' இணையவாசிகளிடம் கவனம் பெற்ற நபர் - வன அதிகாரி பகிர்ந்த வீடியோ வைரல்

விலை உயர்ந்த கருவிகள் இல்லாமல் சிறிய இலையை வைத்து பலரும் மெய்ப்பிக்கும் வகையில், புலிகள் காப்பக வழிகாட்டி ஒருவர் இனிமையான இசையை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய வன அதிகாரி பர... மேலும் பார்க்க

’சிங்கக்குட்டியுடன் விளையாடலாம்’; வினோத சேவையால் சர்ச்சையில் சிக்கிய சீன ஹோட்டல்

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விள... மேலும் பார்க்க

Maithili Thakur: ``நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி

பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப்... மேலும் பார்க்க

சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்

இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரி... மேலும் பார்க்க