செய்திகள் :

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ - விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

post image

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடுக்குப் பிறகு, தன் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறங்கினார். அதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசிய சீமான், ``இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையல்ல. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல...கொடுநிலை." என்றார் காட்டமாக.

சீமான்
சீமான்

இந்த நிலையில்தான் தற்போது பெரியார் குறித்தும், திராவிடக் கட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம், `தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கும்போதே பெரியார் திடலுக்குச் சென்று, அவரின் கொள்கையை அரசியலாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் களத்துக்கும் வந்திருக்கிறார். இப்போது உங்கள் தம்பி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ``அவரை விடுங்கள்... இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை... அவரை இழுக்காதீங்க... அவரை அப்படியே விட்ருவோம்" என அந்தக் கேள்வியை புறக்கணித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay: எட்டமுடியாத பிப்.2 டார்கெட்; மீண்டும் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் - பரபர பனையூர் மீட்டிங்

கடந்த 24 ஆம் தேதி சில மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கியப் பொறுப்புகளுக்கான நியமன ஆணைகளை விஜய் வழங்கியிருந்தார். மொத்தமாக 19 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நிய... மேலும் பார்க்க

Stalin Road Show: கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்டாலினுக்கு வரவேற்பு; 3 கிமீக்கு நீண்ட ரோடு ஷோ | Photo Album

விழுப்புரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. 3 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற ரோடு ஷோவில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.... மேலும் பார்க்க

`திராவிட இயக்கம் தோன்றியது ஏன் தெரியுமா?’ – விழுப்புரத்தில் விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் வழுதரெட்டியில் சமூக நீதிப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்காக அமைக்கப்பட்ட மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் உருவச்சிலையுடன் நினைவகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க... மேலும் பார்க்க

'சீமானின் பெரியார் விமர்சனம் நல்லதுதான்; விஜய்யிடம் நம்பகத்தன்மை இல்லை' - சசிகாந்த் செந்தில் பேட்டி

"தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க-வுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்தது சரிதானா?"செல்வப்பெருந்தகை"எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனத் தலைவர்களும் தெரியும். இ... மேலும் பார்க்க

`22 வருஷமா போராடிட்டு இருக்கோம்; ஆனா அரசு...' - ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்டி

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு... மேலும் பார்க்க

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.... மேலும் பார்க்க