செய்திகள் :

கும்பமேளா துயர சம்பவம் வருத்தமளிக்கிறது! -ராகுல் காந்தி

post image

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்ற பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க |கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!

இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவைதான் இந்தத் துயர சம்பவத்துக்கு காரணம்.

இதையும் படிக்க |கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

கும்பமேளாவிற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல இடங்களில் புனித நீராடல்கள் நடைபெற இருக்கின்றன. விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்வர்!

கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் பலராமபுரத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட மசோதா திருத்தங்கள்: ஓம் பிர்லாவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினர் வியாழக்கிழமை சமர்ப்பித்தனர்.நாடாளுமன்ற கூட்டுக் குழ... மேலும் பார்க்க

c

யமுனையில் அதிகரித்த அமோனியா விவகாரத்தை, நதியில் விஷம் கலந்த குற்றச்சாட்டுடன் கலக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தில்லிக்கு தண்ணீர் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: விவிஐபி பாஸ்கள் ரத்து!

மகா கும்பமேளா பகுதியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விவிஐபி) வழங்கப்படும் சிறப்பு அனுமதியை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ... மேலும் பார்க்க

காந்தி நினைவு நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று(ஜன. ... மேலும் பார்க்க

தில்லியில் சேவை செய்ய பாஜகவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள்: மோடி வேண்டுகோள்

புது தில்லி: யமுனை நதியில் ‘விஷம்’ கலக்கப்படுகிறது என்ற ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தில்லியி... மேலும் பார்க்க