செய்திகள் :

Washington Sundar : 3 வருடங்களுக்குப் பிறகு கம்பேக்; `இது கடவுளின் திட்டம்' - நெகிழும் வாஷி

post image
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா தோற்றிருந்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா சார்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Washington

நியூசிலாந்துக்கு எதிராக வாஷி வீசியது அற்புதமான ஸ்பெல். முதல் டெஸ்ட்டை இந்தியாவின் கையிலிருந்து பறித்த ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை. வீழ்த்தி தன்னுடைய வேட்டையைத் தொடங்கிய வாஷி எஞ்சியிருந்த அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 197-3 என்ற நிலையிலிருந்த நியூசிலாந்து அணி அடுத்த 62 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. இத்தனைக்கும் வாஷிங்டன் சுந்தர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. திடீரென கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கலக்கிவிட்டார்.

இந்த அற்புதமான செயல்பாடை பற்றி வாஷிங்டன் சுந்தர் பேசுகையில், 'நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இதெல்லாமே கடவுளின் திட்டம் என்றுதான் நினைக்கிறேன். நான் வீசும் ஒவ்வொரு பந்திலும் என்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்ட விரும்புகிறேன். ஒரு நாளின் தொடக்கத்திலிருந்தே நான் வீசும் முதல் பந்திலிருந்தே என்னுடைய 100 சதவிகிதத்தையும் கொடுக்க வேண்டும். நேற்றும் அப்படித்தான் என்னுடைய முதல் பந்திலிருந்தே நன்றாக வீசியதாகத்தான் எண்ணுகிறேன். லைன் & லெந்தை பேட்டருக்கு இடம் கொடுக்காமல் டைட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

Washington

முதல் செஷனில் பிட்ச்சில் ஸ்பின்னர்களுக்கு நிறையவே உதவி கிடைத்தது. நான் பெரிதாக எதையும் வித்தியாசமாக முயற்சி செய்ய நினைக்கவில்லை. வேகத்தை மட்டுமே கொஞ்சம் மாற்றி மாற்றி வீசினேன். மற்றபடி ஒரு சீரான லைன் & லெந்த்தை மெயின்டெயின் செய்யவே நினைத்தேன். நேற்றைய நாள் முழுவதுமே எனக்கு சிறப்பான தருணங்களாலேயே நிரம்பியிருந்தது.

ஒரு பௌலராக எப்போதுமே அப்டேட்டடாக இருக்கவே விரும்புகிறேன். அது ரொம்பவே முக்கியமான விஷயம் என்று கூட நினைக்கிறேன். அதன் வழியாக இப்படியான சம்பவங்கள் நிகழும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.' என்றார்.

Ind vs Nz: 59 ரன்கள்; 7 விக்கெட்டுகள்! - அசத்திய வாஷிங்டன் சுந்தர்

புனேவில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்டில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

KL Rahul: `ஒரு டெஸ்ட் மேட்ச்சால் கே.எல். ராகுலை உட்கார வைக்க முடியாது' - ஆதரிக்கும் முன்னாள் வீரர்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியால், அடுத்த டெஸ்ட் போட்டியில் யார் உட்கார வைக்கப்படப்போகிறார் என்பது அணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படு... மேலும் பார்க்க

Zimbabwe: டி20 போட்டியில் 344 ரன்கள்; சூறையாட்டம் ஆடிய ஜிம்பாப்வே; உடைபட்ட ரெக்கார்டுகள்!

2026 டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் காம்பியா என்கிற அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 344 ரன்கள் அடித்து பழைய ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்திருக்கிறது.Au... மேலும் பார்க்க

Australia: டெஸ்ட் அணி ஓப்பனிங் ஸ்லாட் தலைவலியில் ஆஸ்திரேலியா; மீண்டும் விளையாட விரும்பும் வார்னர்!

சொந்த மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா!டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடரைப் போல மற்றொரு பிரபல தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்... மேலும் பார்க்க

Dhoni - Kohli: "தோனியா..? கோலியா..?" - வைரலாகும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதில்!

தோனி, கோலி இருவருமே இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். ஒருபக்கம், ஐ.சி.சி-யின் மூன்று கோப்பைகளை வென்றுகொடுத்த ஒரே கேப்டன் தோனியென்றால், மறுபக்கம் டெஸ்ட் கிரிக்கெ... மேலும் பார்க்க

Sanju Samson: ``ரோஹித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்...'' - சஞ்சு சாம்சன் கூறியதென்ன?

17 வருடங்கள் கழித்து ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது.இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தா... மேலும் பார்க்க