முதல் 2 வாரம் படத்தை விமர்சிக்கக் கூடாது; FDFS ரிவ்யூவுக்கு நோ; திருப்பூர் சுப்ர...
Zomato: டூவீலரில் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் பெண்... வைரலாகும் வீடியோ..!
வேலையில்லாத இளைஞர்களுக்கு ஸொமேட்டோ, ஸ்வக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. இப்போது இந்த வேலைக்கு பெண்களும் வர ஆரம்பித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் சென்று உணவுகளை டெலிவரி செய்து வருகிறார். அப்பெண் தனது குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று உணவை டெலிவரி செய்ய செல்லும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அந்த வீடியோ எடுத்த நபரிடம் அப்பெண் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக இந்த வேலையை செய்து வருகிறேன். நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறேன். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் வேலை கேட்டுச்சென்றால் குழந்தை இருப்பதை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுத்தனர்.
அதன் பிறகுதான் குழந்தையை ஏன் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தேன். ஏற்கெனவே என்னிடம் ஒரு பைக் இருந்தது. அதன் மூலம் கடந்த ஒரு மாதமாக குழந்தையை பைக்கின் முன் பக்கம் வைத்துக்கொண்டு இப்போது இந்த வேலையை செய்கிறேன். வாழ்வதற்கு ஏதாவது வேலை வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறேன். இந்த வேலை ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்த பிரச்னையும் இல்லை''என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவிற்கு 9 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் கொடுத்திருக்கின்றனர். அதோடு அப்பெண்ணின் செயலை பலரும் பாராட்டி கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஸொமேட்டோவில் இப்போது மொத்தமுள்ள உணவு டெலிவரி ஊழியர்களில் 9 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதனை 20 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதற்காக 10 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாகவும் ஸொமேட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb