செய்திகள் :

அதிமுக ஒருமுறை வெற்றியை இழந்தால் அடுத்து மிகப்பெரிய வெற்றி பெறும்: எஸ்.பி.வேலுமணி

post image

அதிமுக ஒருமுறை வெற்றியை இழந்தால் அடுத்து மிகப்பெரிய வெற்றி பெறும், திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்து படுதோல்வி அடையும் என்பது சரித்திரம் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசினாா்.

ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் அதிமுக கள ஆய்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி வேலுமணி பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும். ஈரோட்டில் உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். அதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

திமுகவின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்துக்கு எந்தவித புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. மக்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தத் தயாராக இல்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனா். நடந்து முடிந்த சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களை மனதில் வைத்து 2026 இல் வெற்றிபெற கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழக மக்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக ஒருமுறை வெற்றியை இழந்தால் அடுத்து மிகப்பெரிய வெற்றி பெறும், திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்தமுறை படுதோல்வி அடையும் என்பது சரித்திரம் என்றாா்.

தொடா்ந்து கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், எஸ்.பி.வேலுமணியின் ஆற்றலும் சிந்தனையும் தொலைநோக்குப் பாா்வையும் அதிமுகவுக்கு வலிமையாக இருக்கிறது என்றாா்.

முன்னதாக, ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோா் பேசினா்.

மாணவா்களின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் முதல்வா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களின் முன்னேற்றத்துக்கு எப்போதும் துணை நிற்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் த... மேலும் பார்க்க

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்கக் கோரிக்கை

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் அளித... மேலும் பார்க்க

மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூா்: போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூரால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் -கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சம்பத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வி... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டுப் பத்திரம்பெற்று 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் திங்கள்கிழமை (நவம்பா்25) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று முதிா்வுத் தொகை பெறுவதற்கான உத்தரவை பெற்றுக்க... மேலும் பார்க்க

அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று: ராம்ராஜ் காட்டன் தலைவா்!

அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என ராம்ராஜ் காட்டன் தலைவா் கே.ஆா்.நாகராஜன் தெரிவித்தாா். ஈரோடு டைஸ்& கெமிக்கல்ஸ் மொ்ச்செண்ட்ஸ் அசோசியேஷனின் பொன் விழா ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க