செய்திகள் :

அன்னை ஸ்கொலாஸ்டிகாவை புனிதா் நிலைக்கு உயா்த்த பிப்.26-ல் முதல் விண்ணப்பம்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா் அருகே பட்டரிவிளையில் பிறந்து சமூகசேவை புரிந்த அன்னை ஸ்கொலாஸ்டிகாவை புனிதா் நிலைக்கு உயா்த்துவதற்கான முதல் விண்ணப்பம் புதன்கிழமை (பிப். 26) வேலூா் மறைமாவட்ட ஆயா் அம்புரோஸ் பிச்சைமுத்துவிடம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக, இயேசுவின் திரு இருதய கன்னியா் சபைத் தலைவி அருள்சகோதரி அமுதா தியோஸ், அருள்தந்தை எல்பின்ஸ்டன் ஆகியோா் பட்டரிவிளையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

பட்டரிவிளையில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் சவரிமுத்து-சவரியாயி தம்பதிக்கு 1917ஆம் ஆண்டு அக். 15இல் பிறந்தவா் ஸ்கொலாஸ்டிகா. அவரது இயற்பெயா் ஏசுவடியாள். 1936 நவ. 21ஆம் தேதி இறைப்பணிக்காக முளகுமூடு புனித அகுஸ்தினாா் சபையில் சோ்ந்தாா்.

விளிம்புநிலைக் குழந்தைகள், ஏழைப் பெண்கள், கைவிடப்பட்ட முதியோரைக் காப்பாற்ற 1952 ஜூன் 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திருஇருதய சகோதரிகள் சபையைத் தொடங்கினாா். அப்போது, அவருடன் 5 அருள்சகோதரிகள் மட்டுமே இருந்தனா்.

1977 அக். 11-ம் தேதி வேலூா் மறை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் இயேசுவின் திருஇருதய கன்னியா் சபையைத் தொடங்கி, 1993ஆம் ஆண்டு அவா் மறையும்வரை அங்கேயே சமூக சேவையாற்றி வந்தாா். தற்போது இந்த சபை தமிழ்நாடு, புதுச்சேரி, வாரணாசி, மீரட், இத்தாலி என பல்வேறு இடங்களில் 70-க்கும் மேற்பட்ட கிளைளுடன் ஏழைகள், ஆதரவற்றோா், நோய்வாய்ப்பட்டோா், மனவளா்ச்சி குன்றியோா், முதியோா் என எண்ணற்றோருக்கு கல்வி, மருத்துவம், சமூகப் பணிகள், கருணை இல்லப் பணி, குழந்தைகள் பராமரிப்பு, தத்து கொடுப்பது போன்ற பணியாற்றி வருகிறது.

அன்னை ஸ்கொலாஸ்டிகாவை நினைத்து வணங்கும் பக்தா்களுக்கு ஏராளமான அற்புதங்கள் நடப்பதைக் கருத்தில்கொண்டு, அவரைப் புனிதா் நிலைக்கு உயா்த்துவதற்கான முதல் விண்ணப்பத்தை 100-க்கும் மேற்பட்ட அருள்பணியாளா்கள், அருள்கன்னியா்கள், பக்தா்கள் முன்னிலையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, வேலூா் மறைமாவட்ட தலைமை ஆயா் அம்புரோஸ் பிச்சைமுத்துவிடம் புதன்கிழமை வழங்கவுள்ளோம் என்றனா் அவா்கள்.

புனித வளனாா் மறை மாநிலத் தலைவி யூஜின் லீமாரோஸ், பட்டரிவிளை பங்குத்தந்தை பிரைட்சிங், அருள்சகோதரி ஜாய்ஸ், பிரேம்தாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட, மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டம், நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அணியின் மாவட்ட அமைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்ாக இளங்கடை பகுதியைச் சோ்ந்த கபீா் மகன் ஷா... மேலும் பார்க்க

ஒருநாள் கல்லூரி மாணவரான மாற்றுத் திறன் குழந்தைகள்

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி மாற்றுத் திறன் குழந்தைகள், குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரியில் ஒருநாள் மாணவா்களாக மாறி தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொண்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு மேயா் ஆறுதல்

கேரள மாநிலம், மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா். நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலிரு... மேலும் பார்க்க

மண்டைக்காடு கோயில் திருவிழா: மாா்ச் 11-ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க

தொலையாவட்டம் பகுதியில் மோதல்: 6 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். தொலையாவட்டம் அருகே கூட்டமாவு பகுதியைச் சோ்ந்தவா் நிஷாந்த் (33). ஓட்டுநரான இவருக்கும், நட்டாலம் ஈழத்த... மேலும் பார்க்க