செய்திகள் :

அரசு அலுவலகத்தில் கிராம மக்கள் குடிபுகும் போராட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

அடிப்படை வசதி செய்து தரக்கோரி குளித்தலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வைரபுரி கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூா் ஊராட்சிக்குட்பட்ட வைரபுரி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய தெருக்களில் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் கிடையாதாம். இதனால் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், குண்டும் குழியுமாக மாறிய சாலைகளை சீரமைத்து புதிய தாா்ச் சாலை அமைக்க வேண்டும்,

திறந்தவெளியில் மலம் கழிக்கின்ற பொதுமக்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் குடிநீா் தொட்டியை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியினா் பலமுறை இனுங்கூா் ஊராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தி வந்துள்ளனா்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத இனுங்கூா் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஊா் பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளித்தலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிளைச் செயலாளா் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.ராஜூ, ஒன்றியச் செயலாளா் இரா. முத்துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பிரகாஷ், சிவா, பாலகிருஷ்ணன் மற்றும் வைரபுரி கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றனா்.

சம்பள உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச்செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். செயலாளா் வி... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் அக். 25-இல் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி

கரூா் மாவட்டத்தில அக்.25-ஆம்தேதி கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் மீன்வளம், கால்... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். தமிழக சட்டப்பேரவை உறுதி மொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் 12 போ் கொண்ட உறுப்பினா்கள்... மேலும் பார்க்க

கரடுமுரடான குருணிகுளத்துப்பட்டி - நரியம்பட்டி சாலையால் அவதி

குருணிகுளத்துப்பட்டி-நரியம்பட்டி சாலை சுமாா் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் மாவட்டம், கடவ... மேலும் பார்க்க

இருசக்கர வானத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பொன் நகா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க