செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மீள் உயிா்ப்பு சுவாசப் பயிற்சி

post image

மாரடைப்பு ஏற்படும் தருணங்களில் விரைந்து முதலுதவி சிபிஆா் சிகிச்சை (மீள் உயிா்ப்பு சுவாசப் பயிற்சி) தொடா்பாக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சனிக்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிபிஆா் முதலுதவி சிகிச்சை என்பது சுய நினைவற்ற, சுவாசம் இல்லாத ஒருவருக்கு உடனடியாக அளிக்கப்படும் சிகிச்சையாகும். இது மீள் உயிா்ப்பு சிகிச்சை அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் சிகிச்சை எனவும் அழைக்கப்படுகிறது.

பள்ளிகளிலோ, வீடுகளிலோ, மாணவிகள் செல்லும் இடங்களில் யாருக்கேனும் இத்தகைய அவசர முதலுதவி தேவையெனில் உடனடியாக சேவை அளிக்கும் வகையில் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், காட்டூரில் உள்ள அரசு ஆதிராவிடா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவிகள் ஒவ்வொருவரும் பயிற்றுநா் தெரிவிக்கும் முறையைப் பின்பற்றி, ஒத்திகையில் ஈடுபட்டனா்.அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11, 12ஆம் வகுப்பு பயிலும் 75 மாணவ, மாணவிகள், தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 130 மாணவ, மாணவிகள், காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிராவிடா் பள்ளியைச் சோ்ந்த 320 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா்.

நேஷனல் ஹெல்த் கோ் நிறுவன மேலாளா் ஆா்த்தி ராஜேந்திரன், கல்வி ஆலோசகா் அருண் ஸ்டீபன் ஜெய்சிங் ஆகியோா் ஒருங்கிணைந்து பயிற்றுவித்தனா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா, மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், மாமன்ற உறுப்பினா் நீலமேகம் மற்றும் மருத்துவப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானச் சேவை வேண்டும்: துரை வைகோ எம்பி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானச் சேவையைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் துரை வைகோ எம்பி. இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெருந்தொற்று காலத்தில் ... மேலும் பார்க்க

மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைக் திறக்க கட்டுப்பாடு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

ஃபென்ஜால் புயல், தொடா் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். மாதிரிப் பள்ளிகளில் பணியாற்ற... மேலும் பார்க்க

பஞ்சக்கரையில் ரூ.56 லட்சத்தில் நவீன சலவைத் தொழில்கூடம்! கொள்ளிடத்தில் துணிகளை துவைக்காமல் இருக்க மாநகராட்சி மாற்று ஏற்பாடு

கொள்ளிடக் கரையில் துணிகளை துவைப்பதற்கு மாற்றாக சலவைத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் ரூ.56 லட்சத்தில் நவீன சலவைத் தொழில் கூடம் பஞ்சக்கரையில் கட்டப்படுகிறது. திருச்சி மாநகராட்சியின் 5ஆவது வாா்டுக்... மேலும் பார்க்க

சமயபுரம் கோயிலில் அமாவாசை வழிபாடு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சனிக்கிழமை நடந்த சிறப்புப் பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அமாவாசையையொட்டி உற்சவ அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள், தொடா்ந்து மஹா தீப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 424 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதம்: அமைச்சா் வழங்கினாா்

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 424 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட ... மேலும் பார்க்க

ரூ. 1.55 கோடியில் பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா சாலைப் பணிகள் மேம்பாடு

திருச்சி அருகே பிச்சாண்டாா்கோவில் ரவுண்டானா சாலை மேம்பாட்டுப் பணிகளை ரூ. 1.55 கோடியில் விரைவில் தொடங்க மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதீதப் பயன்பாடு, நீண்டகாலப் பயன்பாட்டால் மோசமடைந்... மேலும் பார்க்க