Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?
தூய்மைப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பெண் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம், மந்தை காலனியைச் சோ்ந்த சுடலை. இவரது மனைவி சாந்தி (42). இருவரும்அடையக்கருங்குளம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வந்தனா். இவா்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுடலை மது குடித்துவிட்டு வந்ததையடுத்து தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விரக்தியில் இருந்த சாந்தி வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சனிக்கிழமை காலை சுடலை எழுந்து பாா்த்தபோது சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தி சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.