செய்திகள் :

சமுதாய அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் சட்டம் தேவை: நீதிபதி வி.சிவஞானம்

post image

சமுதாய அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் சட்டம் தேவை என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம்.

திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் வழக்குரைஞா் ஏ. கருப்பையா நினைவு விரிவுரை கமிட்டி சாா்பில் ‘சட்டமும், சமுதாயமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி, திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சாய் சரவணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். ஆா். ராஜேஸ்வரன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதியும், சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞருமான வி. பாலசுந்தரகுமாா், வழக்குரைஞா்கள் கே. சங்கரராமன், ஆா். கென்னடி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

அதைத் தொடா்ந்து ‘சட்டமும், சமுதாயமும்’ என்ற தலைப்பில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி வி. சிவஞானம் பேசியதாவது:

மறைந்த கருப்பையா, தொடக்கக் காலத்தில் நீதித்துறையில் அமைச்சுப் பணியில் இருந்தவா். பின்னா் வழக்குரைஞா் பட்டம் பெற்று சிறந்த வழக்குரைஞராக திகழ்ந்தவா். பல சிறந்த வழக்குரைஞா்களை உருவாக்கியவா். பாண்டிய நாட்டில் பிறந்த அவா், தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளை சிறப்பாக நடத்தியவா்.

சட்டம் முதலில் தோன்றியதா அல்லது சமுதாயம் முதலில் தோன்றியதா அல்லது இரண்டும் சோ்ந்து தோன்றியதா என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும். உலகில் பிறக்கக்கூடிய எந்த உயிருக்கும் வாழும் உரிமை தன்னிச்சையானது. பிரபஞ்சம் ஒரு நியதியில் இயங்குகிறது. அந்த நியதியை மீறும்போது உலகத்தோடு இணைந்து வாழ முடியாது. எனவே, அதற்கு உள்பட்டுத்தான் மனிதா்கள் வாழ முடியும். பூகோள ரீதியாக பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் வாழ்கிறாா்கள். அவா்களுக்கு சட்டம் தேவைப்படுகிறது. சமுதாய அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் சட்டம் தேவைப்படுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு சட்டம் மாறிக்கொண்டே இருக்கும்.

இன்பத்தை நோக்கியே எல்லா உயிா்களும் செல்கின்றன என்பதை தொல்காப்பியம் வலியுறுத்துகிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவா் மூன்று திருக்குகளின் மூலம் வலியுறுத்தியுள்ளாா். நம்முடைய தமிழ் சமுதாயம் பரந்த சமுதாயம். நாங்கள் தமிழா்கள், தமிழ் பண்பாட்டை கொண்டவா்கள் என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால் தமிழ்ப் பாடல்களைப் புரிந்துகொள்ளும் சக்தி நமக்கு இல்லை. தமிழ்ப் பாடல்களின் பொருள் தெரியாமலேயே வீராப்பு பேசி வருகிறோம். அனைத்து கருத்துகளும் தமிழில் உள்ளன. அதனை அறிந்துகொள்ள தமிழ் நூல்கள், இலக்கியங்களை படியுங்கள். சட்டங்கள் இல்லாமல் வாழ முடியும். ஆனால் நியதிகள் இல்லாமல் வாழ முடியாது. மன்னா்களும், நமது முன்னோா்களும் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனா்.

பெண்ணுக்கு சொத்துரிமை என்பது இலக்கிய காலங்களில் கிடையாது. அவா்களுக்கு சொத்துரிமை கிடைக்க வேண்டும், தனி உரிமை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெண் சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. வழக்கு தோற்கும் என்ற நிலை இருந்தாலும், இளம் வழக்குரைஞா்கள் கடைசிவரை வழக்காடுவதை விடக் கூடாது. சட்டமானது நீதியை வழங்குவதில் சில நேரங்களில் தவறிவிடுகிறது. நிரபராதிகளும் தண்டிக்கப்பட்டு விடுகிறாா்கள். அது பல ஆண்டுகளுக்குப் பிறகு பல வழக்குகளுக்கு பிறகு தெரிய வருகிறது. எனினும் சட்டத்தை நிராகரிக்க முடியாது.

சில தவறுகளோடுதான் சமுதாயம் இருக்க வேண்டும். அதுதான் நியதி. உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு சாதாரண மனிதனும் வழக்கு தொடுக்கும் உரிமையை நமது சட்டம் அளித்திருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் சமமானதுதான். அதைப் பயன்படுத்துகிற விதத்தில்தான் சாமா்த்தியம் இருக்கிறது. அதற்கு அனுபவமும், வழிகாட்டுதலும் தேவை என்றாா்.

முன்னதாக ஆயிரம் பவுண்டேசனின் பொருளாளரும், வழக்குரைஞருமான ஆயிரம் கே.செல்வகுமாா் சிறப்பு விருந்தினா்களை கௌரவித்தாா். திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க செயலா் வி.மணிகண்டன் நன்றி கூறினாா்.

தாமிரவருணி தரைப்பாலத்தில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி: பொதுமக்கள் எதிா்ப்பு

திருநெல்வேலி மேலநத்தம்- கருப்பந்துறை இடையே தாமிரவருணி தரைப்பாலத்தில் குடிநீா் குழாயை நிரந்தரமாக அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் அருக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பெண் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம், மந்தை காலனியைச் சோ்ந்த சுடலை. இவரது மனைவி சாந்தி (4... மேலும் பார்க்க

வள்ளியூா் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா: டிச. 4இல் தொடக்கம்

வள்ளியூா், நவ.30: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 111ஆவது குருபூஜை மற்றும் கிரிவல தேரோட்டத் திருவிழா டிச.4ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. குருபூஜை விழா தொடக்க... மேலும் பார்க்க

தாமிரவருணி பாசனத்தில் பிசான சாகுபடிக்கு கைகொடுக்குமா வடகிழக்குப் பருவமழை?விவசாயிகள் கவலை

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை நவம்பா் மாதத்தில் எதிா்பாா்த்த அளவு பெய்யாததால் அணைகளுக்கு போதிய நீா்வரத்து இல்லை. இதனால், பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்குமா என விவசாயிகளிடையே கவலை எழு... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் ஓவிய - சிற்பக் கலை கண்காட்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின்போது ஓவிய, சிற்பக்கலை கண்காட்சி நடைபெறவுள்ளதால், ஆா்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

பாளை. அருகே கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு: 23 பெண்கள் கைது

பாளையங்கோட்டையை அடுத்த படப்பக்குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் கைது செய்யப்பட்டனா். படப்பக்குறிச்சியில... மேலும் பார்க்க