செய்திகள் :

காலை 10 மணி வரை புதுவை, 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

post image

இன்று(டிச. 1) காலை 10 மணி வரை புதுவை, 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கரையைக் கடந்தது ஃபென்ஜால் புயல்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!

20 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் அதிகபட்சமாக 460 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்து ரூ. 1,980.50-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.மத்திய அரசுக்குச் சொந்த... மேலும் பார்க்க

மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பின்னரும் கடந்த 3 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய எக்ஸ... மேலும் பார்க்க

இருவரி கவிதைக்குச் சிறையா? பர்ஷாஸ்ரீ புராகோஹைன்! கவிதைதான் குற்றம் - 8

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று முன்தோன்றி மூத்த நம் தமிழை, நெஞ்சுயர்த்திப் போற்றுவான் பாரதி. முன்தோன்றியதானாலு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு!

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கரிக்குளம் சபரி நகர் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீட்டின் வளர்ப்பு நாய் ஜானி வ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்- அமைச்சர் துரைமுருகன்

மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக எதிர்க்கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை என அமைச்சர் து... மேலும் பார்க்க