செய்திகள் :

`தனிமை ஆபத்தானது' - மகிழ்ச்சி குறித்து 87 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுவதென்ன?

post image

உலகிலேயே மிக நீண்ட காலம் எடுக்கப்பட்ட மகிழ்ச்சி குறித்த ஆய்வு பற்றி உங்களுக்குத் தெரியுமா? 87 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்கேற்ற பலர் இன்று உயிருடன் இல்லை.

ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன வழி என்கிற கோணத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் Adult Development என்ற பெயரில் 1938ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கியது.

இரண்டு தனி ஆராய்ச்சிகளாக இது தொடங்கப்பட்டது. ஒன்றில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 268 நபர்களும் மற்றொன்றில் பாஸ்டனைச் சேர்ந்த 456 நபர்களும் பங்கேற்றனர்.பங்கேற்பாளர்களை வாழ்நாள் முழுவதும் கண்காணித்து ஆய்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மனிதர்கள் வளர வளர அவர்களது மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் எந்தெந்த காரணிகள் பாதிக்கின்றன என்பதை அறிய இந்த ஆய்வு முயற்சிக்கிறது.

தனிமை (Loneliness)

இந்த ஆய்வின் முதல்கட்ட பங்கேற்பாளர்களில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியும் ஒருவர் என்கின்றனர். தற்போது இந்த ஆய்வு அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. பங்கேற்பாளர்களின் குழந்தைகளிடம் இருந்த தகவல்கள் பெறப்பட்டுவருகிறது. தற்போது மனநல மருத்துவர் டாக்டர் ராபர்ட் வால்டிங்கர் இந்த ஆய்வை தலைமை தாங்குகிறார்.

ராபர்ட் வால்டிங்கர் மற்றும் இணை இயக்குனர் டாக்டர் மார்க் ஷூல்ஸ் இந்த ஆய்வில் கிடைத்துள்ள தகவல்களைக் கொண்டு  The Good Life: Lessons from the World’s Longest Scientific Study of Happiness என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.

உறவுகளே மகிழ்ச்சிக்கான வழி!

இந்த ஆய்வு கூறும் மிக முக்கிய கருத்து நம் வாழ்க்கையில் உறவுகள் மிக முக்கியமானவை. "நமது உறவுகளும், நாம் உறவுகளில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதும் நம் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன" என ராபர்ட் வால்டிங்கர் கூறியிருக்கிறார்.

"உங்கள் உடலை பார்த்துக்கொள்வது முக்கியம்தான். ஆனால் உங்கள் உறவுகளை கவனித்துக்கொள்வதும் சுய-கவனிப்புதான் (Self Care)" என்கிறார்.

கோவிட் நேரத்தில் தனிமையில் இருப்பது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதாக கண்டறிந்துள்ளனர். தனிமை என்பது புகைபிடிப்பது, உடல் பருமன் போன்றது. முதியவர்களுக்கு தனிமை இதய நோய்களுக்கு கூட வழிவகுக்குமாம். அதேப்போல சமூக உறவுகளைக் கொண்டிருப்பது மூளையின் நலனுக்கு சிறந்தது என்கின்றனர்.

The Good Life: Lessons from the World’s Longest Scientific Study of Happiness.

உலக சுகாதார நிறுவனமும் தனிமை ஒரு தொற்றுநோய் போல பரவிவருவதை சுட்டிக்காட்டி, உலகளாவிய பொது சுகாதார முன்னுரிமையாக இதை அங்கீகரித்து தனிமைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவுகளால் Introvert -கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இன்ரோவெர்ட்கள் குறித்து ராபர்ட் வால்டிங்கர், "அவர்கள் சில உறுதியான உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும். நிறைய மக்கள் தேவையில்லை." என்று பேசியுள்ளார்.

இந்த ஆய்வு அதிக உறவுகளை விட உறுதியான உறவுகளையே முன்னிறுத்துகிறது!

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் மழைநாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் சளி பிடிக்காதது ஏன்?

Doctor Vikatan: மழை நாள்களில்ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சிலருக்கு மிகப் பிடித்த விஷயம். அப்படிச்சாப்பிடுகிறவர்களில் சிலருக்கு மட்டும்தான் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. பலருக்கு ஒன்றும் செய்வதில்லையே, அதற்க... மேலும் பார்க்க

மிரட்டும் `FENGAL புயல்' Udhayanidhi & EPS-ஐ தேடும் மக்கள்!

Fengal புயலால் ஒட்டுமொத்தமான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மழையில் மிதக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பயங்கர காற்று வீசுகிறது. இந்த தருணத்திலும் தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட கரை வேட்டிக... மேலும் பார்க்க

கோவை உக்கடம் மேம்பாலத்தில் விரிசலா..? தீயாக பரவிய வீடியோ... - நெடுஞ்சாலைத்துறை விளக்கம்

பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் வகையில் கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் 3.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.470 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சமரசமான ஏக்நாத் ஷிண்டே; ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் முதல்வர் பதவி யாருக்கு?

அமித் ஷாவை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சியமைப்பதில் ... மேலும் பார்க்க

Priyanka: கேரள பாரம்பர்ய கசவு சேலையில் முழங்கிய பிரியங்கா... அதிர்ந்த நாடாளுமன்றம்..

இந்திய நாட்டின் மிக நீண்ட அரசியல் பாரம்பர்யம் கொண்ட ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, முதல் முறையாக தேர்தல் அரசியலில் வேட்பாளராக களம் இறக்கியது காங்கிரஸ் தலைமை. தந்தையின் படுகொலைக... மேலும் பார்க்க