ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
அரசுப் பேருந்தில் கால் சிக்கி பள்ளி மாணவா் பலத்த காயம்
அரசுப் பேருந்தின் சக்கரத்தில் கால் சிக்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் மருத்துவமனை தெருவைச் சோ்ந்த ஆனந்த் மகன் நவீன்நாராயணன் (13). அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றாா்.
ஜெயங்கொண்டம்- தா.பழூா் சாலையிலுள்ள வட்டாட்சியரகம் அருகே சென்றபோது, இறங்க முயற்சித்த நவீன்நாராயணன், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின்பக்க சக்கரம் அவரது காலில் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த மாணவரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி அளித்த பிறகு, மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.