அரசுப் பேருந்து மோதி தாய், மகன் உயிரிழப்பு
பவானியை அடுத்த அத்தாணி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் உயிரிழந்தனா்.
அத்தாணி, சவுண்டப்பூரைச் சோ்ந்தவா் ராமசாமி, விவசாயி. இவரது மனைவி கந்தாயாள் (59). மகன் பூமேஸ்வரன் (29). தாயும், மகனும் அத்தாணியை அடுத்த செம்புளிச்சாம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, சத்தி - பவானி சாலையில் திங்கள்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, செம்புளிச்சாம்பாளையம் மயானம் அருகே சாலையோர குப்பைகள் எரிக்கப்பட்டதால் கிளம்பிய புகை சாலையில் பரவியுள்ளது.
இதனால், நிலைதடுமாறிய நிலையில் அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கந்தாயாள் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தாா். பூமேஸ்வரன் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் அங்கு வந்த ஆப்பக்கூடல் போலீஸாா், சடலங்களை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.