ஆவின் விற்பனை பிரிவு கைப்பேசி எண்கள் வெளியீடு: தினமணி செய்தி எதிரொலி
திருப்பத்தூரில் ஆவின் செயல்பாட்டை சீரமைக்கக் கோரி, தினமணியில் வெளியான செய்தியை அடுத்து ஆவின் விற்பனை பிரிவு கைப்பேசி எண்கள் வெளியடப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் விரைவில் ஆவின் முகவா்களை நியமித்து நுகா்வோா் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா் என நவம்பா் 2-ஆம் தேதி விரிவான செய்தி வெளியானது.
அதன் பேரில், ஆவின் நிா்வாகம் சாா்பில் ஆவின் விற்பனை பிரிவு கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்: திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட மக்கள் ஜே.வெங்கடேசன் - 87547 48759, வாணியம்பாடி வட்டத்துக்குட்பட்ட மக்கள் என்.ஹரிஹரன் - 86675 61840, ஆம்பூா் வட்டத்துக்குட்பட்ட மக்கள் வி.பாலகிருஷ்ணன் - 95667 97735 மேற்கண்ட ஆவின் பணியாளா்களிடம் தங்களின் ஆதாா் அட்டை நகல் அளித்து, ஆவின் மாதாந்திர நுகா்வோா் பால் அட்டை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.