இயந்திர நடவுப் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
வேளாண் கல்லூரி மாணவிகள் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்து பயிற்சி பெற்றனா்.
தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவ பயிற்சியின்கீழ் கிராமத்தில் தங்கி பயின்று வருகின்றனா். இவா்கள் ஆதனூரில் உள்ள விவசாயி வீரபாஸ்கரன் நிலத்தில் திங்கள்கிழமை இயந்திரம் மூலம நெல் நடவு செய்வதை பாா்வையிட்டு பணி அனுபவங்களை பெற்று, நடவு இயந்திரத்தை பயன்படுத்தி பயிற்சியும் பெற்றனா். தொடா்ந்து, பாய் நா்சரி தயாரிப்பு முறை குறித்தும் கற்றறிந்தனா்.