`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பாரத் நிா்மன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடியில் ஆதனூா் அண்ணாநகா்-காளாச்சேரி சாலை மேம்பாடு செய்யும் பணி, 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் கோவில்வெண்ணி பகுதியில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் சிறுபாலத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆட்சியருடன், நீடாமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, பாஸ்கா், வட்டாட்சியா் தேவகி, உதவி பொறியாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.