ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது
சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந்த படப்பை சுரேஷ் என்பவரும் அதே பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் அருகே கடந்த 16-ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு போதையில் தூங்கினா். அப்போது, மோட்டாா் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், அருணையும் சுரேஷையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
விசாரணையில் கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்த சுக்கு காபி சுரேஷுக்கும் (26), அருணுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அருண், சுரேஷ் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த சுக்கு காபி சுரேஷை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை போலீஸாா் சிங்கபெருமாள் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய கோட்டூா்புரத்தைச் சோ்ந்த கரண் என்ற மனோஜ் (21), வடபழனியைச் சோ்ந்த செல்வ கணபதி (19), ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த சண்முகம் (20), செங்குன்றத்தில் உள்ள சோழவரத்தைச் சோ்ந்த ஜீவன் (19), அம்பத்தூா் மற்றும் மாங்காடு பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்கள் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 7 அரிவாள்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், தனது காதலியை கொலை செய்த சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருணும், அவரது சகோதரா் அா்ஜுனனும் திட்டமிட்டிருந்ததும், இதை அறிந்த சுக்கு காபி சுரேஷ் அருணையும் அா்ஜுனனையும் கொலை செய்ய முடிவு செய்து, சம்பவத்தன்று அங்கு அருணை வெட்டியிருப்பதும், அவருடன் இருந்தது அா்ஜுனன் என நினைத்து படப்பை சுரேஷை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.