போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
இருவேறு இடங்களில் வீடுகளில் தங்க நகைகள், பணம் திருட்டு
கடலூா் மாவட்டம், பெண்ணாடம், ஆவினங்குடி காவல் சரக பகுதிகளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மனைவி புவனேஸ்வரி (24). இவா், கடந்த 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.
20-ஆம் தேதி புவனேஸ்வரி வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 கிராம் தங்க நகைகள், 15 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு வீட்டில்: ஆவினங்குடியை அடுத்த கொடிகளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (53). இவா், சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 48 கிராம் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.