இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
இறுதிக்கட்டத்தில் பிரபல தொடர்! சோகத்தில் ரசிகர்கள்!
பனி விழும் மலர் வனம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
ஈரமான ரோஜாவே - 2 தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் தொடர் பனி விழும் மலர் வனம்.
அண்ணன் - தங்கை மற்றும் அக்கா - தம்பி இவர்களுக்கு இடையேயான பாசப் போரட்டமே இத்தொடரின் மையக்கரு. மேலும் இத்தொடரில் ஷில்பா, தேஜாங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!
இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராக பனி விழும் மலர் வனம் சீரியல் உள்ளது.
தற்போது, பனி விழும் மலர் வனம் தொடரின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் இத்தொடரின் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கும் ஏன் முடிக்கிறீர்கள் என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இத்தொடருக்குப் பதிலாக ஒளிபரப்பப்படும் புதிய தொடரின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.