வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி...
இலவச கண் மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச கண், பல் மருத்துவ சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய கூட்டுறவு வார விழா நிறைவு நாளையொட்டி, நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை சரக துணைப் பதிவாளா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ., மு.பெ.கிரி பங்கேற்று முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினாா்.
முகாமில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், ஆலோசனை வழங்கினா். இதில், 36 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
முகாமில், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவா் சதீஷ்குமாா், மாவட்ட கூட்டுறவு ஓன்றியத்தின் மேலாண் இயக்குநா் சிவக்குமாா், செங்கம் கள மேலாளா் செந்தில்குமாா், மாவட்ட துணைப் பதிவாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவுச் சங்க செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். மேல்ராவந்தவாடி கூட்டுறவுச் சங்க செயலா் மோகன் நன்றி கூறினாா்.