செய்திகள் :

ஈரோட்டில் ரூ.1.20 கோடி மோசடி; 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் பெங்களூரில் கைது... என்ன நடந்தது?

post image

சேலத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (51). இவர் ஈரோட்டில் கடந்த 2002-இல் கம்ப்யூட்டர் டேட்டா நிறுவனத்தை நடத்தி வந்தார். முன்பணம் கட்டினால் அதற்கேற்ப டேட்டா வேலை தருவதாகவும், வேலை முடிந்து ஒப்படைத்ததும், செலுத்திய பணத்தை விட இருமடங்கு தருவதாக விளம்பரம் செய்தார். இதை நம்பிய பலரும், கோடிக்கணக்கில் பிரபாகரனிடம் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் டேட்டா வேலை பெற்று செய்தனர். இந்நிலையில், பிரபாகரன் தலைமறைவானார். பிரபாகரனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள், ஈரோடு டவுன் போலீஸில் புகார் அளித்தனர். இந்த வழக்கு, ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

பிரபாகரன்

சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணையில் ஈரோட்டில் கம்ப்யூட்டர் டேட்டா ஜாப் ஒர்க் தருவதாக, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை, பிரபாகரன் வசூலித்து மோசடி செய்ததும், அவருடன் கூட்டாளிகளாக ஈரோடு, கொத்துக்காரர் வீதியைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் (50), பிரபாகரன் மனைவி வண்டார்குழலி (51), சேலம், குமாரகிரிபேட்டை ராஜ்குமார் (49), வீரக்குமார் (எ) வீரமணி (45), சேலம், கிச்சிபாளையத்தை சேர்ந்த அரசேந்திரன் (62) என ஆறு பேர் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் சேலம் மாவட்டத்தில் பிசினஸ் சொல்யூசன் பெயரில் நிறுவனம் நடத்தி, மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரபாகரன், அவரது மனைவி உள்பட ஆறு பேர் மீதும், சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு ஜெ.எம்.-3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பிரபாகரன் மட்டும் 2008 முதல் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். 16 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், பிரபாகரனை தலைமறைவு குற்றவாளியாக கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார், வேறொரு வழக்கில் ஒருவரைப் பிடிக்க கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றுள்ளனர். அந்த நபருடன் பிரபாகரன் இருந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

மோசடி...

இதனால், சந்தேகமடைந்த போலீஸார் பிரபாகரனின் விவரங்களை சோதனை செய்தபோது ஈரோடு, சேலம், நெல்லை, துாத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிசினஸ் சொல்யூசன்ஸ் பெயரில் நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததும், சி.பி.சி.ஐ.டி.போலீஸாரால் தேடப்பட்டு வருவதும் தெரிந்தது. இதையடுத்து ஈரோடு சி.பி.சி.ஐ.டி., போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பெங்களூரு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபாகரனை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!

'ஒண்ணாம் தேதி சம்பளம் வருது... பத்தாம் தேதியே கையில ஒண்ணும் மிஞ்சறது இல்ல' என்ற நிலை தான் இன்று பலருக்கும் உள்ளது. இதற்கு, பிளானிங் இல்லாதது தான் முக்கிய காரணம். பிளான் சரியாக செய்து...அதை நடைமுறைப்பட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.17,000 கோடி... கொள்ளைபோகும் மக்கள் பணம்... ஆன்லைன் மோசடிகளுக்கு என்றுதான் முடிவு?

ஒரு வழியாக மத்திய அரசாங்கம் தூங்கி விழித்திருக்கிறது. ஆம், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம், ஆன்லைன் கொள்ளையர்களால் சுருட்டப்பட்டுக் கொண்டிருக்க, பறிகொடுத்த மக்களின் கதறல்கள், அரசாங்கத்த... மேலும் பார்க்க

அடுத்த இதழ்... நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ்

அடுத்த இதழ்...நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ் மேலும் பார்க்க

``குற்றச்செயலில் வந்த பணத்தில் சுகேஷ் கிப்ட் வாங்கி கொடுத்தார் என்று தெரியாது'' -நடிகை ஜாக்குலின்

நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்த பரிசுகள்பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட... மேலும் பார்க்க

நிதி இலக்குகளை அடைய எப்படி முதலீடு செய்ய வேண்டும்..? - வேலூரில் வழிகாட்டும் நிகழ்ச்சி!

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சி வேலூரில் நடைபெற உள்ளது.முதலீடு என்றால் என்ன? எங்கே, எப்படி முதலீடு... மேலும் பார்க்க

எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் என்றால்... அரசும் அதிகாரிகளும் எதற்கு?

‘கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடி’ என்று சொல்வதுபோல், பொதுவெளி மற்றும் இணையவெளி என எங்கு பார்த்தாலும் விதவிதமாக... வகை வகையாக நிதி மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. எம்.எல்.எம் என்ற மல்ட்டி லெவல் மார்க்கெ... மேலும் பார்க்க