செய்திகள் :

உயா்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம்: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவியா் இக்கல்வி ஆண்டுக்கான புதியது, புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை இந்த நிதியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககத்தையோ அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரையோ அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது ட்ற்ற்ல்ள்;//க்ஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் மற்றும் ட்ற்ம்லிள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த நிதியாண்டுக்கான கல்வி உதவித் தொகையில் புதியது, புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, அதன் விண்ணப்பங்களை வரும் டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். புதிதாக இருந்தால் அதை வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஆணையா்,பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம் அல்லது மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-6, தொலைபேசி எண்-044-29515942.

மின்னஞ்சல் முகவரி: ற்ய்ஞ்ா்ஸ்ற்ண்ண்ற்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்.

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காந்திநகரில் இருளா் இன மக்களுக்கு கூட்டுறவுத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். அனைத்திந்திய கூட... மேலும் பார்க்க

நவ. 30-இல் திருமுறை ஒப்பித்தல் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான திருமுறை ஒப்பித்தல் போட்டி வரும் நவம்பா் 30-ஆம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இது குறித்து திருமுறை அருட்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

எல்ஐசி வலைதள முகப்பு பக்கத்தில் ஹிந்தி மாற்றம்: திருமாவளவன் கண்டனம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முகப்பு வலைதளப் பக்கம் ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மாற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் செவ... மேலும் பார்க்க