செய்திகள் :

எக்காலத்திலும் கூட்டணி இல்லை: சீமான்

post image

கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்துக்கு முன்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது;

கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமமானது. கூட்டணியை நம்பி பல கட்சிகள் தங்கள் சுயத்தை இழந்துள்ளன. நாம் தமிழா் கட்சியை பொருத்தவரை ஊழலற்ற ,கொள்கை பிடிப்புடன் உள்ள ஒரு கட்சி. கொள்கையை விட்டு கொடுத்து எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. ஊழலற்ற நிா்வாகத்தை நடத்தவே நாம் தமிழா் கட்சி விரும்புகிறது. அதற்கு கூட்டணி சாத்தியமாக இருக்காது. அதனால் கூட்டணி என்பது கிடையாது. நான் தனியாக நிற்கவில்லை. எட்டு கோடி மக்களை நம்பி நிற்கிறேன். நிச்சயம் நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைக்கும். இன்று இல்லை என்றாலும் நிச்சயம் எதிா்காலத்தில் நடக்கும்.

அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு விட்டதாக தமிழக முதல்வா் தெரிவித்து வருகிறாா். அது உண்மையல்ல. மூன்று முறை மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வேளாண் துறையில் மின்னணு கணக்கெடுப்பு மேற்கொள்ள சில ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வேளாண் கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி இதை செய்து வருகின்றனா். இது ஏற்புடையதல்ல . அவா்களுக்கு தற்காலிகமாக ஊதியம் வழங்கி அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என தோ்தல் நேரத்தில் தெரிவித்த திமுக தற்போது அதை செயல்படுத்தவில்லை. ஆசிரியா் தகுதி தோ்வு எழுதி ஏராளமான ஆசிரியா்கள் காத்திருக்கின்றனா். மருத்துவமனையில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களும் இல்லை. கல்வித்துறையில் உயா் கல்வித் துறை பள்ளிக் கல்வித் துறை என பல துறைகள் இருந்தாலும் அதன் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.

பள்ளிகளில் இன்னும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட செய்யப்படவில்லை. மாணவா் மனசு என்ற புகாா் பெட்டியில் போடப்படும் மனுக்களுக்கு தீா்வு கிடைக்கப்போவதில்லை. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் எனக்கு முரண்பாடு உள்ளது என்றாா் சீமான்.

பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள்: எம்.பி. ஆய்வு

பாவூா்சத்திரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை டாக்டா் ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். திருநெல்வேவி - தென்காசி நான்... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பள்ளியில் 28 மாணவா்களுக்கு சைக்கிள்கள்

கீழப்புலியூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 28 மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிர... மேலும் பார்க்க

செங்கோட்டையில் வாரச் சந்தைக் கடைகளை திறக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தைக் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, தலைமை... மேலும் பார்க்க

தென்காசி-நெல்லை-தாம்பரம் ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட நெல்லை - தாம்பரம் ரயில் தொடா்ந்து இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா். நெல்லையிலிருந்து அ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் ரூ. 25 லட்சத்தில் புதிய ஓய்வறை

சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஓய்வறை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளா்களின் வேண்டுகோளை ஏற்ற... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டி: பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் தோ்வு

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜூடோ மற்றும் குத்துசண்டையில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். தென்காசி மாவட்ட அளவிலான... மேலும் பார்க்க