செய்திகள் :

ஒட்டன்சத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

post image

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 5 கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, பொங்கல் திருவிழா மட்டுமன்றி, தொடா் விடுமுறையின் காரணமாக பக்தா்களின் வருகை கடந்த 2 நாள்களாக அதிகரித்து வருகிறது. பாதயாத்திரை பக்தா்களோடு, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்களும் பழனிக்கு வருவதால், திண்டுக்கல்- பழனி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் அடுத்த மூலசத்திரம் பகுதியில் 4 வழிச்சாலைக்கான மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சாதாரண நாள்களில் கூட வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டன்சத்திரம்- பழனி புறவழிச்சாலை முதல் மூலசத்திரம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தா்களின் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள், லாரிகள், காா்கள் மட்டுமன்றி இரு சக்கர வாகனங்கள் கூட இந்த 5 கி.மீ. தொலைவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக காத்து நின்றன.

முந்திச் செல்ல முயன்று 5 முதல் 7 வரிசைகளில், சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீஸாா் இல்லை.

2 நாள்களுக்கு கூடுதல்

பாதுகாப்பு தேவை: பொங்கல் தி்ருநாளையொட்டி, திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் பழனிக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், மூலசத்திரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா்.

முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழா் தேசம் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழா் தேசம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்ல... மேலும் பார்க்க

172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் நிவாரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழையினால் மகசூல் பாதிக்கப்பட்ட 172 விவசாயிகளுக்கு விரைவில் ரூ.17.58 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த பலத்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாா் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உணவு, உணவு... மேலும் பார்க்க

கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை தனியாா் அறக்கட்டளை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது... மேலும் பார்க்க

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ‘லேசா்’ காட்சி சோதனை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசா் காட்சி சோதனை நடைபெற்றது. இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக் கு முன்னா் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து ஏரியில் பல்வேறு பண... மேலும் பார்க்க

கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கொடைக்கானல் நகா் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிந்த வனத் துறையினா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டுமாட... மேலும் பார்க்க