செய்திகள் :

கரூர் மரணங்கள்: விஜய்யைச் சந்திக்க வாக்கர் உதவியுடன் சென்ற இளைஞர் யார்?

post image

கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் விதமாக இன்று சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார்.

அதனையொட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லும் பேருந்து
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லும் பேருந்து

இதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் கிழக்கு கிராமம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சார்ந்த அவரது கணவர் வாக்கர் உதவியுடன் ஆம்னி பேருந்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், நடிகர் விஜயைச் சந்திக்க அவரை அனுப்பி வைத்தனர்.

இவர் ஏற்கனவே விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கூட்ட நெரிசலில் தனது மனைவியைப் பறிகொடுத்த அவர், விஜயை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில் வாக்கர் உதவியுடன் சென்னைக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

'உறவுகளுடன் தனிப்பட்ட நிகழ்வு!' - மாமல்லபுரத்தில் கரூர் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறவிருக்கிறார். TVK Vijayகடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு ப... மேலும் பார்க்க

'தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா?' - திருமாவளவன் கேள்வியின் பின்னணி என்ன?

"இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் பீகார் தேர்தல் அறிவிப்பு காட்டுகிறது" என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் ... மேலும் பார்க்க

"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained

'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு...'இது நேற்று காலை அமெரிக்க செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்'டில் வெளியான செய்திக் கட்டுரை. இது வெளியான நொடி முதல் இந்தியாவில் பல்வேறு புயல்களையும், ப... மேலும் பார்க்க

5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும்பத்தினர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வி... மேலும் பார்க்க