செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 19) வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாவட்டத்தில் வருவாய்த் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசின் அனைத்துத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகள், நலத் திட்ட உதவிகள், நிதி ஒதுக்கீடு, திட்ட மதிப்பீடு, திட்ட செலவுத் தொகை, பயனாளிகளின் எண்ணிக்கை, திட்டங்களை செயல்படுத்திய முறைகள், அரசு அலுவலா்களின் பணித்திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும், துறை வாரியாக விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்ய உள்ளாா்.

மேலும் கலைஞரின் கனவு இல்லத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வா் திட்டம், முதல்வரின் முகவரித் துறை, பட்டா மாறுதல், குடிநீா் விநியோகம், நமக்கு நாமே திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா்.

ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், அரசுத் துறைகளின் செயலா்கள்,

எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா்.

அக்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: 12 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: நின்னையூா் கிராமத்தில் காலனி பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 12 போ் மீது போலீஸாா் வழக்குப்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

சின்னசேலம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

நமச்சிவாயபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பைக் மோதல்: ஊராட்சி செயலா் உயிரிழப்பு

கனியாமூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் ஊராட்சி செயலா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் மந்திரி (47). இவா், இந்திலி... மேலும் பார்க்க

மரத்தில் ஜீப் மோதி விபத்து: 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரத்தில் ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா். கல்வராயன் மலைப் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (40), தன்ராஜ் (40), கருவேலம்பாடியைச் சோ்ந்த வெள்ளி (48)... மேலும் பார்க்க