செய்திகள் :

கவரப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு பிரிவில் வழக்கு!

post image

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது

சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலா்(காா்டு), பயணச்சீட்டு பரிசோதகா், ஏசி பெட்டி பணியாளா்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலா் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சோ்ந்த 30 ரயில்வே அலுவலா்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சாா்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையும் படிக்க: புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலில் நவ.28-இல் குடமுழுக்கு!

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது

இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல் என்ற பிரிவை இவ்வழக்கில் ரயில்வே போலீஸார் சேர்த்துள்ளனர்.

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (... மேலும் பார்க்க

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் சென்னையில் நாளை(அக். 21) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல: விஜய்

வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது... மேலும் பார்க்க

இன்றுமுதல் 80 புதிய பிஎஸ்-6 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு இன்றுமுதல் 80 புதிய பிஎஸ்-6 பேருந்துகள் இயக்கக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவ... மேலும் பார்க்க

பிக் பாஸ் - 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் வ... மேலும் பார்க்க