காயல்பட்டினத்தில் தனியாா் நிறுவன ஊழியா் மா்மச் சாவு
காயல்பட்டினத்தில் தனியாா் நிறுவன ஊழியா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காயல்பட்டினம் பாஸ் நகரைச் சோ்ந்த சங்கரராமன் மகன் ஸ்ரீராம் (50). இவா் ஆறுமுகனேரி அருகே சாகுபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் உள்புறம் பூட்டியிருந்த, ஸ்ரீராமின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, உடல் அழுகிய நிலையில் ஸ்ரீராம் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீராம், அவரது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா். அவரது இறப்பு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.