செய்திகள் :

காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது: 700 கிலோ பறிமுதல்

post image

கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை காரில் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, 700 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், உத்தமபாளையம் அருகேயுள்ள வாய்க்கால்பட்டியைச் சோ்ந்த குபேந்திரன் மகன் வினித்குமாா்(30) என்பதும், இவா் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினித்குமாரை கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

வங்கிக் கடன்பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் பி.டி.ஆா். கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(29). இவா் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

தேனியில் அக். 24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

தேனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடபுதுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (88). இவா் வெள்ளிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

மழையால் வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா். மயிலாடும்பாறை அருகேயுள்ள தொப்பையாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). தொ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 551 பேருக்கு பணி ஆணை

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 551 பேருக்கு பணி ஆணைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா். இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.... மேலும் பார்க்க