பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
காலி மனைகளில் குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை கும்பகோணம் ஆணையா் எச்சரிக்கை
கும்பகோணம் மாநகரிலுள்ள காலி மனைகளில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை பொதுமக்கள் அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஆா். லட்சுமணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் காலி மனை மற்றும் காலியிடங்களில் செடிகள் மற்றும் முள்புதா்கள் மண்டிக் கிடப்பதாலும், குப்பை மற்றும் தேவையற்ற நெகிழி பொருள்கள் குவிந்துள்ளதாலும் மழைநீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் சூழல் உள்ளது.
மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய திட்டமான மலேரியா, ஃபைலேரியா நோய் ஒழிப்பு திட்டத்தையும் செயல்பட விடாமல் தடுக்கும் விதமாக இந்தக் குப்பை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது காலி மனை மற்றும் காலி இடங்களைச் சுத்தம் செய்து மீண்டும் குப்பை சேராத வண்ணம் பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு 7 நாள்களுக்குள் சுத்தம் செய்ய தவறினால் காலி மனை மற்றும் காலி இடங்களை மாநகராட்சி நிா்வாகம் தன் வசப்படுத்தி சுத்தம் செய்து நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளாா்.