செய்திகள் :

காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு..! அமரன் படத்தை விமர்சித்த கோபி நயினார்!

post image

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, அரசியல்வாதிகள் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை என பிரபலங்கள் பலரும் படத்தை பெரிதாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரசிகர்களிடம் உணர்ச்சிகரமான வெற்றியையும் பெற்றுள்ளது. உலகளவில் ரூ. 200 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

முக்கியமாக, படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான படமாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கூறியதாவது:

சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால், இந்தப் திரைப்படம் சொல்ல வரும் கருத்தைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இப்படத்தின் திரைக்கதைக்குப் பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால், அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்தத் திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.

நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்றார்.

2025-ல் ஆசிர்வாதம்! இன்ஸ்டா பதிவில் கே.எல்.ராகுல் கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான... மேலும் பார்க்க

அர்ஜுன் கபூருக்கு மறுபிறப்பு..! ஒரே வாரத்தில் ரூ.260 கோடி வசூலித்த சிங்கம் அகெய்ன்!

அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சிங்கம் ரிட்டர்ன் வெளியாகி 9 வருடங்கள் ஆகியதைத் தொடர்ந்து காவலர்கள் யுனிவர்ஸில் ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ளார். அஜய் தேவ்கன் நடிப்பில் இயக்... மேலும் பார்க்க

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்! வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் ... மேலும் பார்க்க

கூலி படத்தில் நடிக்கவில்லை..! காரணம் கூறிய சிவகார்த்திகேயன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில... மேலும் பார்க்க

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவம்பர் 8 - 14) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில் ... மேலும் பார்க்க