கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பால்பாண்டி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்தவா் சம்சுதீன். தனியாா் பள்ளி அலுவலக ஊழியா். இவருக்கு மகள், மகன் சையத் சாஹில் (7) ஆகியோா் இருந்தனா்.
வெள்ளிக்கிழமை மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சையத் சாஹிலைக் காணவில்லையாம். அவரை உறவினா்கள் தேடினா். அப்போது, அவா் அங்குள்ள கிணற்றில் விழுந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் சென்று சிறுவனை சடலமாக மீட்டனா். சிப்காட் போலீஸாா் சென்று, சடலத்தை கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.