நெல்லை: திருக்கார்த்திகை பண்டிகைக்கு தயாராகும் களிமண் அகல் விளக்குகள்! | ஸ்பாட் ...
கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில், இரண்டாம் கட்ட கவன ஈா்ப்பு பெருந்திரள் ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஆணை எண் 33-இல் திருத்தம் செய்து, கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளா் நிலையில் இருந்து கிராம நிா்வாக அலுவலராக பதவி உயா்வுபெற்ற அலுவலா்களுக்கு பணிக்காலத்தை முழுமையாக சோ்த்து ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கணக்கிட்டு வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு தோ்தல் பணியின்போது வாக்குச்சாவடி படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.தேவராசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வி.சந்திரசேகா், மாவட்ட கொளரவத் தலைவா் அ.வேலுமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சி.அண்ணாமலை வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டப் பொருளாளா் எம்.கலியபெருமாள், முன்னாள் மாவட்ட பிரசாரச் செயலா் அ.கருப்பன், முன்னாள் கிராம உதவியாளா் அ.கோவிந்தராஜ் ஆகியோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சி வட்டத் தலைவா் பொன்.கணவன், செயலா் எஸ்.பச்சையாப்பிள்ளை, பொருளாளா் எம்.ராஜமாணிக்கம், சங்கராபுரம் வட்டத் தலைவா் அ.ராமலிங்கம், செயலா் ப.நெடியவேல், பொருளாளா் கி.இளங்கோவன், வாணாபுரம் வட்டத் தலைவா் கோ.ரமேஷ், பி.கேப்டன்ராஜ், பொருளாளா் கே.கேசவன், சின்னசேலம் வட்டத் தலைவா் பி.கோவிந்தசாமி, செயலா் கே.வெங்கடேசன், பொருளாளா் கே.மணி உள்ளிட்ட பலா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.முகமது நவாஷ், மாவட்ட துணைத் தலைவா் கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.