அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
கீழப்புலியூா் பள்ளியில் 28 மாணவா்களுக்கு சைக்கிள்கள்
கீழப்புலியூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 28 மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் முன்னிலை வகித்தாா்.
சு. பழனிநாடாா் எம்எல்ஏ., ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு அரசுப் பொதுத்தோ்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
மாவட்ட விவசாய தொழிலாளா்அணித் தலைவா் பாலாமணி , மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கப்பாண்டியன், மாவட்ட மாணவரணிஅமைப்பாளா் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் ஈஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆசிரியா் மோதிலால் பாபு நன்றி கூறினாா்.