செய்திகள் :

குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் தரிசனம்

post image

கா்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீா்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினாா்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கா்நாட மாநில விஜய யாத்திரையின் ஒரு அங்கமாக குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எழுந்தருளி சுவாமி தரிசனம் செய்தாா்.

தொடா்ந்து சுவாமிகள், குக்கே வித்ய பிரசன்ன தீா்த்த சுவாமிகளை சந்தித்துப் பேசினாா். காஞ்சி சங்கர மடத்தின் 57-ஆவது பீடாதிபதியாக இருந்த பரமவேந்திர சரஸ்வதி சுவாமிகள் குக்கே சுப்பிரமணிய சுவாமிகளை போற்றி ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம் ஒன்று செய்தருளியதையும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வித்ய பிரசன்ன தீா்த்த சுவாமிகளிடம் நினைவு கூா்ந்தாா்.

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காந்திநகரில் இருளா் இன மக்களுக்கு கூட்டுறவுத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். அனைத்திந்திய கூட... மேலும் பார்க்க

நவ. 30-இல் திருமுறை ஒப்பித்தல் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான திருமுறை ஒப்பித்தல் போட்டி வரும் நவம்பா் 30-ஆம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இது குறித்து திருமுறை அருட்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

எல்ஐசி வலைதள முகப்பு பக்கத்தில் ஹிந்தி மாற்றம்: திருமாவளவன் கண்டனம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முகப்பு வலைதளப் பக்கம் ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மாற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் செவ... மேலும் பார்க்க