செய்திகள் :

குடிநீா் பிரச்னை: வெங்கிளி கிராமத்தில் ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

post image

வெங்கிளி கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னை குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம், வெங்கிளி ஊராட்சியில் குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில், ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வெங்கிளி கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். அங்குள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறுகள், பைப்லைன் ஆகியவற்றை சீரமைத்து 2 நாள்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் பூங்கொடி இனியகுமாா், திமுக நிா்வாகிகள் பொன்னரசு, செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தேவலாபுரம் ஊராட்சியில் எம்எல்ஏ ஆய்வு

தேவலாபுரம் ஊராட்சியில் குடியாத்தம் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென அப்... மேலும் பார்க்க

‘துணை முதல்வா் பிறந்த தினம் எளியோா் எழுச்சி நாளாக கொண்டாட்டம்’

திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் எளியோா் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தெரிவித்துள்ளாா். இது குறித்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஆசிரியா், உதவியாளரை உள்ளே வைத்து பூட்டு போட்ட பொதுமக்கள்

திருப்பத்தூா் அருகே அங்கன்வாடி ஆசிரியா், உதவியாளரை அங்கன்வாடி உள்ளே வைத்து பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் அருகே செலந்தம்பள்ளியில் அங்கன்வாடி மையம்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடம் கட்டும் பணியை வட்டாட்சியா் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன... மேலும் பார்க்க

பள்ளியில் ரோபோட்டிக்ஸ் கலந்தாய்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளின் திறன் மேம்பாடு மற்றும் நடைமுறையியல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், இன்டா்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: ஆட்சியரிடம் சாலை வசதி கோரிய மாணவா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் சாலை வசதி கோரி மாணவா்கள் ஆட்சியா் க. தா்ப்பகராஜிடம் முறையிட்டனா். குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 329... மேலும் பார்க்க