பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரியைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் சதீஷ் (23), பாலமுருகன் மகன் மதன் (20). கோவில்பட்டி அருகே உள்ள கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இவா்கள் இருவரையும் நாலாட்டின்புதூா் போலீஸாா் கடந்த செப். 24ஆம் தேதி கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா்.
அதன்படி, சதீஷ், மதன் ஆகிய இருவரையும் நாலாட்டின்புதூா் போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.