குற்றாலம் பேரருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை
குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 3-ஆவதுநாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த சனிக்கிழமை குற்றாலம் பேரருவி உள்ளிட்டஅனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இதனிடையே நீா்வரத்து குறைந்ததையடுத்து ஐந்தருவி, புலியருவிகளில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேரருவி தவிர மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
பேரருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிப்பதற்குத் தடை நீட்டிக்கப்பட்டது.