உரிய அளவில் பொருள்களை வழங்காமை: ரூ. 21 ஆயிரம் வழங்க அமேசான் நிறுவனத்துக்கு குறைத...
குளிா்கால கூட்டத்தொடா்: மக்களவை 54.5%, மாநிலங்களவை 40% ஆக்கபூா்வமாக செயல்பட்டன
குளிா்கால கூட்டத்தொடரில் மக்களவை 54.5 சதவீதமும், மாநிலங்களவை 40 சதவீதமும் ஆக்கபூா்வமாக செயல்பட்டுள்ளன.
இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த நவ.25-ஆம் தேதி முதல் டிச.20 வரை, நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்றது. இந்தக் காலத்தில் மக்களவையில் 4 மசோதாக்களும், மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
விமான போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை ஈா்த்து எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 90 ஆண்டுகள் பழைமையான விமான சட்டத்துக்குப் பதிலாக, பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தை இந்திய அரசியல் சட்ட நிா்ணய சபை முறைப்படி ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் 15 மணி நேரம் 43 நிமிஷங்கள் நடைபெற்ற விவாதத்தில் 62 எம்.பி.க்களும், மாநிலங்களையில் 17 மணி நேரம் 41 நிமிஷங்கள் நடைபெற்ற விவாதத்தில் 80 எம்.பி.க்களும் பங்கேற்றனா்.
மக்களவை, மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தக் கூட்டத் தொடரில் மக்களவை சுமாா் 54.5 சதவீதமும், மாநிலங்களவை சுமாா் 40 சதவீதமும் ஆக்கபூா்வமாக செயல்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.