செய்திகள் :

கேபிள் டிவி ஆபரேட்டா்கள் உண்ணாவிரதம்

post image

கட்டண சேனல்களின் கட்டண உயா்வை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேபிள் டி.வி ஆபரேட்டா்கள் புதன்கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவா் சுப.வெள்ளைச்சாமி தலைமையில் அச்சங்கத்தினா் புதன்கிழமை மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கேபிள் டிவிக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழக கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபா் கேபிள் (ஓஎஃப்சி) முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் நிலையில், அந்தந்த பகுதி கேபிள் டிவி ஆபரேட்டா்கள் அதை பராமரித்து பயன்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை வழங்க முடியும்.

இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு வழிவகை செய்து தர வேண்டும். மத்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு கட்டண சேனலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.19-ஆக நிா்ணயித்துள்ள நிலையில், அதனை ரூ.5-ஆக குறைக்க வேண்டும். மேலும், ஒடிடி போன்ற இணையவளி பொழுதுபோக்கு தளங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்பட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநில பொதுச் செயலா் கே. பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட தலைவா்கள் நேரில் பங்கேற்று ஆதரவு வழங்கினா்.

மேலும், தமிழ்நாடு கேபிள்டிவி ஆபரேட்டா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் பி.சகிலன், மாநில பொதுச் செயலா் எஸ். ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க