`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' - சொல்கிறார் பிரேமலதா
கைதி - 2 படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கைதி திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, “கைதி - 2 படத்தின் முதல்கட்ட பணிகள் கடந்த மாதமே துவங்கிவிட்டது. நடிகர் கார்த்தி ‘டாணாக்கரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடித்து முடித்ததும், டிசம்பர் மாதம் கைதி - 2 படப்பிடிப்பு துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மேலாளரை அடித்தேனா? உன்னி முகுந்தன் விளக்கம்!